முதலமைச்சர் தமிழகம் முழுதும் 256 நடமாடும் மருத்துவமனைகளை தொடங்கி வைத்தார். இன்று முதலமைச்சர் மு.க-.ஸ்டாலின் இல்லம் தேடி மருத்துவ சிகிச்சை என்ற திட்டத்தின் கீழ் 256 நடமாடும் மருத்துவமனை வாகனங்களை தொடங்கி வைத்தார். தொலைதூர கிராமங்களுக்கான மருத்துவத்தை வலுப்படுத்த நடமாடும் மருத்துவமனைகள் தொடங்கப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 133 மருத்துவ வாகனங்கள் சேவை தொடங்கப்பட்டது. இந்நிலையில் அடுத்த கட்டமாக இன்று 256 நடமாடும் மருத்துவமனை வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி […]
Continue reading …முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லையில் நடந்த கல்குவாரி விபத்திற்கு ரூ.15 லட்சம் நிவாரணம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நெல்லையில் நடந்த கல்குவாரி விபத்து குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருநெல்வேலி மாவட்டம், அடைமிதிப்பான்குளத்தில் உள்ள கல்குவாரியில் கடந்த மே 14ம் தேதி திடீரென மிகப்பெரிய பாறைகள் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் சிக்கிய இருவர் மீட்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். ஆயர்குளத்தை சேர்ந்த முருகன் (வயது 23) மற்றும் இளையார்குளத்தை சேர்ந்த செல்வன் (வயது 25) ஆகிய […]
Continue reading …சமீபத்தில் கல்லூரி மாணவர்கள் பேருந்து நடத்துனரை தாக்கியபோது வன்முறையில் இறங்கியுள்ளனர். இதையடுத்து இப்படி வன்முறையில் ஈடுபடும் மாணவர்கள் கைது செய்யப்படுவார்கள் என சென்னை கமிஷனர் எச்சரித்துள்ளார். கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் சென்று வர பேருந்து மற்றும் மின்சார ரயில்களையே நம்பி உள்ளனர். அதில் செல்லும் மாணவர்களுக்குள் “ரூட்டு தல” யார் என்பது குறித்து பிரச்சினை எழுவது மற்றும் பிற கல்லூரி மாணவர்களுடன் எழும் பிரச்சினைகள் அதிகரித்துள்ளது. சமீபத்தில் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கி கொண்டிருந்த மாணவர்களை கண்டித்த நடத்துனரை […]
Continue reading …டிஎன்பிஎஸ்சி குரூப் குரூப் 2, மற்றும் 2ஏ தேர்வுக்கு காலை 9 மணிக்கு மேல் தேர்வு எழுத அனுமதி கிடையாது என டி.என்.பி.எஸ்.சி தலைவர் அறிவித்துள்ளார். டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2 தேர்வுகள் வரும் 21ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்வுக்கு 9 மணிக்குள் தான் தேர்வு எழுதுபவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். காலை 9 மணிக்கு மேல் வந்தால் தேர்வு எழுதுபவர்களுக்கு அனுமதி கிடையாது. மேலும் இந்த தேர்வை எழுத 11.78 லட்சம் […]
Continue reading …“12th மேன்” இத்திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் மோகன்லால் மற்றும் ஜூத்து ஜோசப் கூட்டணியில் உருவான “திருஷ்யம்” திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் இந்தியைத் தவிர மற்ற மொழிகளில் எல்லாம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. அதையடுத்து வெளியான “திருஷ்யம் 2” திரைப்படமும் வெற்றி பெற்றது. இவர்கள் கூட்டணியில் அடுத்த திரைப்படமாக “12th மேன்” திரைப்படம் உருவாகிறது. இந்த படமும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாகும் […]
Continue reading …இந்தியா கோதுமை ஏற்றுமதிக்கு தடைவிதித்துள்ளது. இதனால் உலகச் சந்தையில் கோதுமை விலை மளமளவென உயர்ந்துள்ளது. இந்தியாவின் இந்த முடிவால் உலக சந்தையில் கோதுமை விலை உச்சத்திற்கு சென்று உள்ளது. இதனால் உலக நாடுகள் இந்தியா மீது தங்களது அதிருப்தியை தெரிவித்துள்ளது. குறிப்பாக ஐரோப்பியாவில் கோதுமை டன் 35 ஆயிரத்துக்கும் அதிகமான விலையில் விற்று வருவதாகவும் இது புதிய உச்சம் என்றும் கூறப்படுகிறது. கோதுமை உற்பத்தியில் அதிகம் இருக்கும் நாடுகளில் ஒன்றான இந்தியா பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து […]
Continue reading …மிகப்பெரும் கண்டம்தான் பூமியின் தென் துருவ பகுதியில் அமைந்துள்ள அண்டார்டிகா. மிகப்பெரிய பனி பாலைவனமாகும். இங்கு மனிதர்கள் வசிக்க இயலாது. அதனால் ஆராய்ச்சிக்காக மட்டுமே சில ஆய்வறிஞர்கள் அண்டார்டிகா சென்று வருகின்றனர். தென் துருவத்தில் அமைந்துள்ளதால் பூமியின் சாய்வு கோணத்தால் ஆண்டுதோறும் 4 மாதங்கள் அண்டார்டிகா இருளில் மூழ்கி விடும். இந்த நான்கு மாதங்களுக்கு சூரியனையே அண்டார்டிகாவில் பார்க்க முடியாது என்பதால் இதை “நீண்ட இரவு “Long Night” என்று அழைப்பார்கள். தற்போது பூமியின் தென் துருவ […]
Continue reading …இந்த வருடத்தில் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் பருவமழை முன்கூட்டியே துவங்கியுள்ளதால் கூடுதல் மழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்ற நிலையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி கடந்த 15ம் தேதி அந்தமானில் தென்மேற்கு பருவமழை தொடங்கி விட்டதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள பகுதிகளில் 5 நாட்களுக்கு […]
Continue reading …தற்போது திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது சிவகார்த்திகேயனின் “டான்” திரைப்படம். ரிலீசாகி மூன்றே நாட்களில் இத்திரைப்படம் 30 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. டான் திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி முதல் நாளில் 13 கோடியும் இரண்டாவது நாளில் 11 கோடியும் மூன்றாவது நாளில் 9 கோடி வசூலாகியுள்ளது. இதுவரை மொத்தம் இந்த படம் 33 கோடி வசூல் ஆகியுள்ள நிலையில் இந்த படத்தின் பட்ஜெட்டை மொத்தம் 40 கோடிதான் என்பது […]
Continue reading …இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தசாவதாரம் 2ம் பாகத்தை பற்றிய தகவலை கூறியுள்ளார். உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் 12 ஆண்டுகளுக்கு முன் வெளியான படம் “தசாவதாரம்.” இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்ததகவல் தற்போது வெளியாகி உள்ளது. பிரபல இயக்குநர் மற்றும் நடிகருமான கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் “கூகுள் குட்டப்பா.” இத்திரைப்படத்தில் தர்ஷன்,- லாஸ்லியா ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ளது. சென்னை திருப்போரிலுள்ள எஸ்.எஸ்.என்.கல்லூரியின் கலை நிகழ்ச்சி ஒன்றில் “கூகுள் குட்டப்பா” பட […]
Continue reading …