சென்னை, அக் 1: சென்னையில் கடந்த 15 நாட்களில் 97 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், டெங்கு காய்ச்சல் பாதிப்பு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக மண்டல நல அலுவலர்கள், சுகாதார அலுவலர்கள் மற்றும் மண்டல பூச்சியியல் வல்லுனர்களுடனான ஆலோசனை கூட்டம் சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் ரிப்பன் மாளிகையில் நடந்தது. இதையடுத்து நிருபர்களிடம் கமிஷனர் ககன்தீப் சிங் பேடி கூறிகையில், “சென்னையில் கடந்த […]
Continue reading …துபாய், அக் 1: ஐபிஎல் போட்டியில், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில், ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 44வது போட்டி நேற்று நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் – சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்து, சென்னை […]
Continue reading …தர்மபுரி, செப் 30: தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தாய்சேய் அவசர சிகிச்சை மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். தருமபுரி மாவட்டத்திற்கு சென்றுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதோடு, அரசு திட்டங்களுக்கான ஆய்வுப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், தருமபுரி அரசு மருத்துவமனையில் ஒருங்கிணைந்த பேறுகால அவசர சிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சை பராமரிப்பு மைய கட்டிடம் உள்ளிட்ட புதிய கட்டிடங்களை, முதலமைச்சர் ஸ்டாலின் இன்று […]
Continue reading …துபாயில் இருந்து சென்னை வந்த இரு ஆண் பயணிகளிடம் இருந்து, 1.38 கிலோ தங்கம், மற்றும் எலக்ட்ரானிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. உளவுத் தகவல் அடிப்படையில் துபாயில் இருந்து சென்னை வந்த, இரு ஆண் பயணிகளை, சுங்கத்துறையினர் இடைமறித்து, அவர்களின் உடைமைகளைச் சோதனை செய்தனர். அப்போது 24 தங்கத்துண்டுகள் லேப்டாப் சார்ஜரில், கருப்பு டேப் சுற்றப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இந்த தங்கத் துண்டுகளின் எடை 1.38 கிலோ. இவற்றின் மதிப்பு ரூ.58.04 இலட்சம். இவை தவிர மேலும் 15 ஐ-போன்கள், லேப்டாப்கள் கைப்பற்றப்பட்டன. இவற்றைக் கடத்தி வந்த இருவரும் சுங்கச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இது குறித்து மேலும் விசாரணை நடப்பதாக, சென்னை சர்வதேச விமான நிலைய சுங்க ஆணையர் தெரிவித்துள்ளார்.
Continue reading …லதா மங்கேஷ்கர் பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, அவரது நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்காக பிரார்த்தனை செய்து, வாழ்த்து தெரிவுத்துள்ளார். பிரதமர் தனது டுவிட்டரில், “சகோதரி லதாவுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள். அவருடைய இனிமையான குரல் உலகம் முழுவதும் எதிரொலிக்கிறது. இந்திய கலாச்சாரத்தின் மீதான அவரது ஆர்வம் மற்றும் பணிவான குணத்திற்காக அவர் பெரிதும் மதிக்கப்படுகிறார். தனிப்பட்ட முறையில், அவருடைய ஆசீர்வாதம் பெரும் வலிமையை அளிக்கும். சகோதரி லதாவின் நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்காக நான் பிரார்த்திக்கிறேன்”, என்று கூறியுள்ளார்.
Continue reading …சென்னை, செப் 28: ‘திருவண்ணாமலை கோவிலின் ஓதுவார் பயிற்சிப் பள்ளியில், 3 ஆண்டு சான்றிதழ் பயிற்சியில் சேர விரும்புவோர், விண்ணப்பிக்கலாம்’ என இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் சார்பாக ஓதுவார் பயிற்சிப் பள்ளி நடைபெற்று வருகிறது. தமிழக அரசு பிறப்பித்த உத்தரவின்படி, 3 ஆண்டு சான்றிதழ் பயிற்சி துவங்கப்பட உள்ளது. இந்நிலையில், இந்த பயிற்சியில் சேர விரும்புவோர், வரும் அக்டோபர் 27 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை, இந்து சமய […]
Continue reading …இஸ்லாமாபாத், செப் 28: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக்கிற்கு, நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான இன்சமாம் உல் ஹக், 51, ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையை படைத்தவர். அவர் 375 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 11,701 ரன்களை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், 119 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8,829 ரன்களை அவர் குவித்துள்ளார். […]
Continue reading …சென்னை, செப் 28: பிரபல நடிகை சாய் பல்லவி, நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் மருத்துவ படிப்பிற்கான நடத்தப்படும் நீட் தேர்வுக்கு, தமிழகம் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தமிழக அரசியல்வாதிகள் இதற்காக போராட்டங்களையும் அவ்வப்போது நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நீட் தேர்வு குறித்து ஏற்கனவே பல சினிமா துறையினர் கருத்து தெரிவித்த நிலையில் தற்போது தமிழ் மற்றும் மலையாள திரைப்பட நடிகை சாய் பல்லவி […]
Continue reading …புதுடெல்லி, செப் 28: நம் நாட்டில், 201 நாட்களுக்குப் பின், கொரோனாவால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை, 20,000க்கும் கீழ் பதிவாகி உள்ளது. இந்தியாவில், கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, குறைந்து காணப்படுகிறது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில், கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து, மத்திய சுகாதாரத் துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில்: நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில், 18,795 பேர், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை, […]
Continue reading …புதுடெல்லி, செப் 28: மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவை, தமிழ்நாடு அரசின் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேற்று சந்தித்துப் பேசினார். டெல்லிக்கு அரசுமுறைப் பயணமாக சென்றுள்ள தமிழ்நாடு அரசின் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தனின்பேரில், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவை நேற்று (27.09.2021) சந்தித்தார். சரம் சக்தி பவனில் நடந்த இந்த சந்திப்பில், தமிழ்நாடு அரசின் […]
Continue reading …