Home » Posts tagged with » Netrikkan (Page 94)

திமுக வேட்பாளர் குறித்து ஜவாஹிருல்லா அதிருப்தி!

Comments Off on திமுக வேட்பாளர் குறித்து ஜவாஹிருல்லா அதிருப்தி!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா திமுக அறிவித்துள்ள 21 வேட்பாளர்களில் ஒரு முஸ்லிம் வேட்பாளர் கூட இல்லை என தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு இதையடுத்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 10 வேட்பாளர்களில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய வேண்டும் என கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் “திமுக வேட்பாளர் தேர்வு தனக்கு மகிழ்ச்சி தரவில்லை. காங்கிரஸ் கட்சியாவது முஸ்லிம்களுக்கு உரிய வகையில் பிரதிநிதித்துவம் தரும் வகையில் வேட்பாளர் […]

Continue reading …

பள்ளி மாணவர்களுக்கு கொண்டாட்டம்!

Comments Off on பள்ளி மாணவர்களுக்கு கொண்டாட்டம்!

பள்ளிக்கல்வித்துறை தமிழ்நாட்டில் ஏப்ரல் 13-ம் தேதி முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என அறிவித்துள்ளது. இது தொடர்பாக அறிக்கையில், “18வது மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்திலுள்ள அனைத்து அரசு / அரசு உதவிபெறும் / தனியார் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான 2023 -2024ம் கல்வி ஆண்டிற்கான பள்ளி இறுதித் தேர்வுகள் 02.04.2024 அன்று தொடங்கி 12.04.2024 வரை நடைபெறும் எனவும், 13.04.2024 முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், […]

Continue reading …

திமுக கூட்டணிக்கு கருணாஸ் ஆதரவு!

Comments Off on திமுக கூட்டணிக்கு கருணாஸ் ஆதரவு!

முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் “பாஜக எனும் பாசிச சனாதன சக்தியை வீழ்த்த, அடிமை அதிமுகவை விரட்ட, நாம் ஒரு குடையின் கீழ் அணியமாக வேண்டியிருக்கிறது” என்று கூறி திமுக கூட்டணிக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அறிக்கையில், “பா.ஜ.க. எனும் பாசிச சனாதன சக்தியை வீழ்த்த, அடிமை அதிமுகவை விரட்ட, நாம் ஒரு குடையின் கீழ் அணியமாக வேண்டியிருக்கிறது. அதற்கான களமாக இந்த நாடாளுமன்றத் தேர்தலை பயன்படுத்தி நாட்டை காக்கவேண்டும். மதவெறி சக்திகளை அடியோடு […]

Continue reading …

ராம் சரண் படத்தின் தொடக்க விழா!

Comments Off on ராம் சரண் படத்தின் தொடக்க விழா!

‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படத்தில் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் காவியப்படைப்பான குறிப்பிடத்தக்க நடிப்பிற்குப் பிறகு, உலகளாவிய நட்சத்திர அந்தஸ்தான நடிகரானார் ராம் சரண். இவர் தற்போது பிரபல திரைப்பட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் அரசியல் திரில்லர் திரைப்படமான ‘கேம் சேஞ்சர்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார். ராம்சரண் – இப்படத்தை தொடர்ந்து நட்சத்திர இயக்குநரான புச்சி பாபு சனாவுடன் ‘RC16’ எனும் திரைப்படத்தில் இணைகிறார். இத்திரைப்படத்தை விருத்தி சினிமாஸ் சார்பில் தயாரிப்பாளர் வெங்கட சதீஷ் கிலாறு சர்வதேச தரத்தில் தயாரிக்கிறார். இப்படத்தை […]

Continue reading …

சத்குரு பேசி வெளியிட்ட வீடியோ!

Comments Off on சத்குரு பேசி வெளியிட்ட வீடியோ!

சத்குரு கடந்த 4 வாரங்களாக கடுமையான தலைவலியால் அவதிப்பட்டு வந்தார். இருந்தபோதிலும், சத்குரு மஹாசிவராத்திரியிலும் டில்லியில் நடைபெற்ற மற்ற கூட்டங்களிலும் முழுமையாக பங்கேற்றார். சத்குரு சில நாட்களுக்கு முன் அவசர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். அவர் நன்றாக குணமடைந்து வருகிறார். கவலைப்பட ஒன்றுமில்லை. சத்குருவின் உடல் நிலையில் முன்னேற்றம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக உள்ளது இது பற்றி மருத்துவர்கள் “சத்குரு எங்களால் ஏற்படுத்தப்பட்ட மருத்துவ நடவடிக்கைகளைத் தாண்டி தன்னைத்தானே அவர் குணப்படுத்திக் கொள்கிறார்” என்று கூறினார்.  

Continue reading …

சேப்பாக்கம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்!

Comments Off on சேப்பாக்கம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்!

சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்கவுள்ளதால், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை போலீசார் தெரிவித்துள்ளனர். நாளை 2024ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி தொடங்குகிறது. முதல் போட்டி சென்னை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெற உள்ளது. சென்னையில் ஐபிஎல் போட்டி நடைபெறவுள்ளதை அடுத்து நாளை மற்றும் மார்ச் 26ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இது குறித்து வெளியான அறிவிப்பில், “பெல்ஸ் […]

Continue reading …

மாற்றுத் திறனாளியான சர்வதேச வாள் வீச்சு வீராங்கனை புகார்!

Comments Off on மாற்றுத் திறனாளியான சர்வதேச வாள் வீச்சு வீராங்கனை புகார்!

இந்திய பாராலிம்பிக் கமிட்டி சார்பாக சென்னையில் நடந்த தேசிய அளவிலான வீல் சேர் வாள் வீச்சு போட்டியில் கோவை உருமாண்டம் பாளையம் பகுதியைச் சேர்ந்த தீபீகா ராணி, மாற்றுத் திறனாளியான தீபீகா, தங்கம், வெள்ளி வென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு ஒன்றை அளிக்க வீல் சேரில் வந்த, மாற்றுத்திறனாளி தீபிகா ராணி செய்தியாளர்களிடம், “தேசிய மற்றும் சர்வதேச அளவிலான பாரா ஸ்போர்ட்ஸ் விளையாட்டுகளில் கலந்து கொள்வதற்கான வீரர், வீராங்கனைகளை தேர்வு […]

Continue reading …

‘சுந்தரா டிராவல்ஸ்’ நடிகை மீது போலீசில் புகார்!

Comments Off on ‘சுந்தரா டிராவல்ஸ்’ நடிகை மீது போலீசில் புகார்!

“சுந்தரா டிராவல்ஸ்” படத்தில் நடித்த ராதா தனது மகனுடன் சென்று இளைஞரை தாக்கியதாக காவல்துறையில் புகாரளிக்கப்பட்டுள்ளது. “சுந்தரா ட்ராவல்ஸ்” திரைப்படத்தில் முரளி மற்றும் வடிவேலுவுடன் நாயகியாக நடித்தவர் ராதா. இவர் சென்னை விருகம்பாக்கத்தில் குடியிருக்கிறார். அவர் தனது மகனுடன் சென்று ரிச்சர்ட்ஸ் என்ற இளைஞரை தாக்கியதாக புகாரளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரிச்சர்ட்ஸ் தந்தை டேவிட் ராஜ் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்புகாரில் எனது மகன் பிரான்சிஸ் ரிச்சர்ட்ஸ் என்பவர் கடந்த 14ம் தேதி சாலிகிராமம் சாலை […]

Continue reading …

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2: மீண்டும் நேர்முகத்தேர்வு!

Comments Off on டி.என்.பி.எஸ்.சி குரூப் 2: மீண்டும் நேர்முகத்தேர்வு!

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 பிரிவில் நேர்காணல் முடிந்த பின்னரும் இன்னும் 29 காலியிடங்கள் இருப்பதால் அந்த இடத்தை நிரப்ப இறுதி கட்ட நேர்முகத் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி செய்திக்குறிப்பில், “குருப்-2 தேர்வில் நேர்காணல் கொண்ட பதவிகளில் உள்ள 161 காலியிடங்களுக்கு 2 கட்டங்களாக நேர்முகத் தேர்வு நடத்தப்பட்ட பின்னரும் இன்னும் 29 காலியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. நேர்காணல் பதவிகளில் உள்ள இடங்களை முழுவதுமாக நிரப்ப கடைசி கட்டமாக நேர்முகத்தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கு […]

Continue reading …

மார்ச் 31ம் தேதி வங்கிகள் செயல்படும்: ரிசர்வ் வங்கி!

Comments Off on மார்ச் 31ம் தேதி வங்கிகள் செயல்படும்: ரிசர்வ் வங்கி!

மார்ச் 31ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் நிதியாண்டின் இறுதி நாள் என்பதால் அன்றைய தினம் வங்கிகள் செயல்படும். ஆனால் இந்தாண்டு மார்ச் 31ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதையடுத்து அன்றைய தினம் வங்கிகள் செயல்படுமா என்ற கேள்வி பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் மத்தியில் எழுந்தது. இது குறித்து ரிசர்வ் வங்கி அளித்துள்ள விளக்கத்தில், “மார்ச் 31ம் தேதி ஞாயிறன்று அனைத்து வங்கிகளும் செயல்படும். இந்த நிதியாண்டின் இறுதி நாள் என்பதால் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அனைத்து வங்கிகளும் திறந்திருக்கும்” என்று […]

Continue reading …