Home » Posts tagged with » Netrikkan (Page 100)

குட்னைட் இயக்குனரின் படத்தில் சிவகார்த்திகேயன்?

Comments Off on குட்னைட் இயக்குனரின் படத்தில் சிவகார்த்திகேயன்?

“குட்னைட்” திரைப்படம் கடந்தாண்டு வெளியாகி நல்ல விமர்சனங்களையும் வசூலையும் குவித்தது, பெரிய ஆர்ப்பாட்டம் இல்லாமல் ரிலீசான இத்திரைப்படம் பலரது பாராட்டுகளையும் குவித்தது. இப்படத்தில் “ஜெய்பீம்” புகழ் மணிகண்டன், ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இப்படத்தை இயக்குனர் விநாயக் சந்திரசேகர் இயக்கியிருந்தார். இப்படத்தின் வெற்றியால் கவனிக்கப்படும் இயக்குனரானார் விநாயக் சந்திரசேகர். இவர் இப்போது தனது அடுத்த படத்துக்கான வேலைகளில் இறங்கியுள்ளார். அவர் தன்னுடைய அடுத்த படத்தில் சிவகார்த்திகேயனை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. […]

Continue reading …

எடப்பாடி மற்றும் அண்ணாமலைக்கு எதிராக முதலமைச்சர் வழக்கு?

Comments Off on எடப்பாடி மற்றும் அண்ணாமலைக்கு எதிராக முதலமைச்சர் வழக்கு?

தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகிய இருவருக்கும் எதிராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தமிழக பாஜக அண்ணாமலை ஆகியோர் கடந்த சில நாட்களாக போதைப்பொருள் விவகாரம் குறித்து முதலமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினரை இணைத்து சில கருத்துக்களை பேசி வருவது பரபரப்பை ஏற்படுத்தியது. போதைப்பொருள் கடத்தல் […]

Continue reading …

வணிகர் சங்கப் பேரவையின் பொதுக்குழு கூட்டம்!

Comments Off on வணிகர் சங்கப் பேரவையின் பொதுக்குழு கூட்டம்!

தமிழ்நாடு வணிகர் சங்ககளின் பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா வணிகர்கள் மீது ரவுடிகளின் தாக்குதல் அதிகரித்துள்ளதால் அதற்கான சிறப்பு பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும்- என்று கூறியுள்ளார். வணிகர் சங்க பேரமைப்பின் பொதுக்குழு கூட்டம் சிவகங்கை தனியார் மண்டபத்தில் மாவட்டத் தலைவர் பால குருசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரம ராஜா கலந்து கொண்டு செய்தியாளர்களிடம், “ரவுடிகள் வணிகர்களை மிரட்டி தாக்குதல் நடத்துவது அதிகரித்து […]

Continue reading …

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம்!

Comments Off on ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம்!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக உயர்மட்ட குழுவினர் அறிக்கை தாக்கல் செய்தனர். கடந்தாண்டு மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கான சாத்தியக் கூறு குறித்து ராம்நாத் தலைமையிலான குழு ஆய்வு செய்யும் என்று அறிவித்தது. இக்குழுவின் தலைவராக முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமிக்கப்பட்டார். மக்களவை, மாநிலப் பேரவைகள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்காக, அரசமைப்புச் சட்டத்தின் தற்போதைய கட்டமைப்பை கருத்தில் கொண்டு, […]

Continue reading …

21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல்!

Comments Off on 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல்!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் காங்கிரஸ் மற்றும் மதிமுகவிற்கான தொகுதிகள், திமுக வேட்பாளர்கள் பட்டியல் போன்றவற்றை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குமக்கள் தேசிய கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்டவை உள்ளன. திமுக, தன்னுடைய கூட்டணி கட்சிக்கு 19 தொகுதிகளை விட்டுக் கொடுத்துள்ளது. மீதமுள்ள 21 தொகுதிகளில் திமுக நேரடியாக போட்டியிடுகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு கூட்டணி […]

Continue reading …

ஓடிடி, இணையதளங்கள் முடக்கம்! மத்திய அரசு அதிரடி!

Comments Off on ஓடிடி, இணையதளங்கள் முடக்கம்! மத்திய அரசு அதிரடி!

மத்திய அரசு ஆபாச காட்சிகள் இடம் பெற்றிருந்த ஓடிடி தளங்கள், இணையதளங்கள், செயலிகள் மற்றும் சமூக வலைதள கணக்குகளை முடக்கி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு (Ministry of Information & Broadcasting) அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இந்தியாவில் அரசியலமைப்புச் சட்டத்திற்கு புறம்பாக பல்வேறு எச்சரிக்கைகளுக்குப் பின்னும் ஆபாசமான மற்றும் மோசமான உள்ளடக்கத்தை வெளியிட்டு வந்த 19 இணையதளங்கள், 10 செயலிகள், 57 சமூக வலைதள பக்கங்கள் (Social Media) மற்றும் ஓடிடி தளங்கள் […]

Continue reading …

மதுராந்தகம் பேருந்தில் 4 மாணவர்கள் பலி; வழக்குப்பதிவு செய்த நீதிபதி!

Comments Off on மதுராந்தகம் பேருந்தில் 4 மாணவர்கள் பலி; வழக்குப்பதிவு செய்த நீதிபதி!

நேற்று மதுராந்தகம் அருகே 4 மாணவர்கள் படியில் தொங்கிக்கொண்டு பயணம் செய்த போது கீழே தவறி விழுந்து பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து தானாக முன்வந்து நீதிபதி வழக்கு தொடர்ந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மதுராந்தகம் மாணவர்கள் பலியான சம்பவம் குறித்து தானாக முன்வந்து வழக்கு தொடர வேண்டும் என வழக்கறிஞர் ஜார்ஜ் வில்லியம் செல்பவர் தலைமை நீதிபதியிடம் முறையிட்டார். அப்போது நீங்களே ஏன் பொதுநல மனுவாக தாக்கல் செய்யக்கூடாது என்று […]

Continue reading …

வானிலை மையம் எச்சரிக்கை!

Comments Off on வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழ்நாட்டில் இரண்டு நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “13.03.2024 முதல் 19.03.2024 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்ன தெரிவிக்கப்பட்டுள்ளது, தமிழகத்தில் இன்றும் நாளையும் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது வருகிற 17-ம் தேதி வரை அதிக வெப்பநிலை […]

Continue reading …

கர்நாடக முதல்வருக்கு இபிஎஸ் கண்டனம்!

Comments Off on கர்நாடக முதல்வருக்கு இபிஎஸ் கண்டனம்!

அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் பக்கத்தில், “இந்திய அரசு கேட்டாலும் கூட தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டு நீர் தர முடியாது என்று எரிகிற தீயில் எண்ணெய்யை ஊற்றுவது போலான கர்நாடக காங்கிரஸ் முதலமைச்சர் சித்தராமையாவின் கருத்து கடும் கண்டனத்திற்குரியது. கோடைக்காலம் நெருங்குகின்ற இந்த வேளையில், தமிழ்நாட்டில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நீரை பெற திராணி அற்ற இந்த விடியா […]

Continue reading …