மகளிர் உரிமை திட்ட பயனாளிகளை கொச்சைப்படுத்தியதாக, நடிகைகுஷ்புவைக் கண்டித்து திமுக மகளிர் அணி ஆர்ப்பாட்டம்.
உருவப்படத்தை எரித்து போராட்டம்- பரபரப்பு.
பாஜக நிர்வாகி குஷ்புவைக் கண்டித்து திருச்சியில் திமுக மகளிர் அணியினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மகளிர் உரிமை திட்ட பயனாளிகளை இழிவுபடுத்தி பேசியதாக பாஜக நிர்வாகியும் நடிகையுமான குஷ்பு மீது புகாரும் கண்டனமும் எழுந்துள்ளது. அந்த வகையில் பல்வேறு கட்டபோராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
திருச்சியில் மத்திய மாவட்ட மகளிர் அணி சார்பில், மத்திய பேருந்து நிலையம் அருகே பெரியார் சிலை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதா தலைமை வகித்தார். அப்போது குஷ்பூ உருவ படத்தை கிழித்து கண்டன முழக்கம் எழுப்பினர். இந்நிகழ்வில்மண்டல குழு தலைவர் துர்கா தேவி, மாநகர துணை செயலாளர் கவுன்சிலர் கலைச்செல்வி,கவுன்சிலர் மஞ்சுளா தேவி பாலசுப்பிரமணியன் மற்றும் திமுக மகளிர் அணியைச் சேர்ந்த பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.
அதேபோல திருச்சி உறையூர் குறத்தெரு பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு திமுக மாவட்ட மகளிர் அணி சார்பாக மாமன்ற உறுப்பினர் கலைச்செல்வி, விசாலாட்சி உள்ளிட்ட மகளிர் அணியினர் பங்கேற்றனர்.இதில் குஷ்பு உருவ படத்தை எரித்து கண்டன முழக்கம் எழுப்பினர்.இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.