பேனாக்களை சுவாமி முன்பு வைத்து வழிபாடு செய்து 12ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு எழுத சென்ற மாணவ – மாணவிகள்.

Filed under: தமிழகம் |

கோவில்பட்டியில் தேர்வு எழுத உள்ள பேனாக்களை சுவாமி முன்பு வைத்து வழிபாடு செய்து 12ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு எழுத சென்ற மாணவ – மாணவிகள்.

தமிழகத்தில் இன்று பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குகிறது. இந்த தேர்வு வரும் 22ம் தேதி வரை நடைபெற உள்ளது.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 3 ஆயிரத்து 302 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது. முதல் நாளான இன்று தமிழ் தேர்வுடன் தேர்வு தொடங்குகிறது.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு தேர்வு எழுதிச் செல்லும் மாணவ மாணவிகள் கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்மன் பூவனநாத சுவாமி திருக்கோவிலில் தேர்வு எழுத உள்ள பேனாவை வைத்து சாமி கும்பிட்டு தேர்வு எழுத சென்றனர்.

இது குறித்து தேர்வு எழுத உள்ள மாணவிகள் கூறுகையில் தேர்வு எழுத உற்சாகத்துடன் இருப்பதாகவும், , கேள்விகள் எளிதாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம், ஆசிரியர்கள் சிறப்பாக பயிற்சி கொடுத்துள்ளது மட்டுமின்றி, தேர்வினை எளிதில் எதிர்கொள்ள ஊக்கம் கொடுத்திருப்பதற்காகவும், நல்ல முறையில் தேர்வு எழுதி நல்ல மதிப்பெண்கள் பெறுவோம் என்றனர் நம்பிக்கையுடன்.