தேனி மாவட்டம்
தேனியில் தொடரும் பட்டியல் இன இளைஞர்களின் மர்ம மரணம்….!
சட்ட விரோதமாக தோட்டத்தில் அமைத்த மின்வெளியில் சிக்கி உயிரிழந்த கூலித் தொழிலாளியின் உடலை வாங்க மறுத்து குடும்பத்தினர் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகையிட்டனர்.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள குள்ளப்பக்கவுண்டன்பட்டி சேர்ந்த கூலி தொழிலாளி கிருஷ்ணகுமார் (35)இவருக்கு ஆனந்தி என்ற மனைவியும் ஒன்னரை வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.
பரிமளா என்னும் நிலக் கிளாரின் தோட்டத்தில் சட்டத்துக்கு விரோதமாக மின்வெலி அமைத்திருந்ததில் எதிர்பாராத விதமாக சிக்கி உயிரிழந்தார் அவரது உடல் மூன்று நாட்களாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவரையில் போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்ட நிலையில் உள்ளது.
இந்நிலையில் பெரும் செல்வந்தரான தோட்டத்துக்கு சொந்தக்காரர் பரிமளா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தமிழ் புலிகள் அமைப்பின் ஒத்துழைப்போடு நீதி தேடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது குடும்பத்தினருடன் முற்றுகையிட்டனர். மேலும் திராவிட மாடல் அரசை கண்டித்து.கோஷங்கள் எழுப்பியும்,தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக் கூறியும் குள்ளப்ப கவுண்டன்பட்டியை சேர்ந்த மக்கள் பெரும் திரளாக வந்து ஆட்சியரை கண்டித்து தமிழக அரசினை கண்டித்தும் உண்ணாவிரத போராட்டங்கள் மூன்று நாட்களாக நடைபெற்று வருகிறது இதனால் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது…