வேகத்தடுப்பில் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த திருவெறும்பூர் காவல் ஆய்வாளர் பிரியா இன்று உயிரிழப்பு.
திருச்சி தனியார் மருத்துவமனையில் 7ம் தேதி புதுக்கோட்டை பழைய மருத்துவமனை கார்னரில் உள்ள வேகத்தடை மீது கணவருடன் டூவீலரில் பயணித்த போது விபத்தில் சிக்கி காவல் ஆய்வாளர் பிரியா வயது 45 நிலை தடுமாறி கீழே விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்தார்
இந்த நிலையில் திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை சிகிச்சை பெற்று வந்தார்
சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை 11 மணியளவில் காவல் ஆய்வாளர் பிரியா உயிரிழந்தார். பிரியாவின் சொந்த ஊர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பேராவூரணி ஆகும்.