தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான காலிஸ்தானை சேர்ந்த மூன்று தீவிரவாதிகளை துப்பாக்கியுடன் காவல்துறை கைது செய்துள்ளனர்.
பாகிஸ்தானின் ஐஎஸ்ஐயிடம் பயிற்சி பெற்ற காலிஸ்தான் இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள் டெல்லியில் உள்ளதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து காண்டாநாலா பகுதியில் காவல்துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்ட போது மொஹிந்தர் பால்சிங், குர்தேஜ் சிங் மற்றும் லாவ் பிரித் ஆகிய மூவரையும் காவல்துறை கைது செய்து உள்ளனர். பின்னர் அவர்களிடம் இருந்து மூன்று கைத் துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், அவர்களிடம் விசாரணை நடத்தியதில் டெல்லி மற்றும் பஞ்சாப்பில் சில பேரை கொள்வதற்கு வந்ததாக கூறி உள்ளனர். இன்னும் விசாரணை நடைபெற்று வருகிறது.