புகையிலை போதை பொருள்கள் பதுக்கல் : திருச்சியில் உணவகத்துக்கு சீல் வைப்பு.

Filed under: தமிழகம் |

புகையிலை போதை பொருள்கள் பதுக்கல் : திருச்சியில் உணவகத்துக்கு சீல் வைப்பு.

அதிகாரிகள் நடவடிக்கை.

திருச்சி சென்னை நெடுஞ்சாலையில் சிறுகனூர் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில், திருச்சி மாவட்ட உணவுப்பாதுகாப்புத்துறை நியமன அலுவலர்  ரமேஷ்பாபு தலைமையிலான உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பாண்டி, அன்புச்செல்வன், பொன்ராஜ், கந்தவேல் மற்றும் மகாதேவன் உள்ளிட்டோர், மேற்கொண்ட சோதனையில், சுமார் 26 கிலோ புகையிலைப் போதைப் பொருகள் இருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், இது தொடர்பாக மூவரை பிடித்து சிறுகனூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் அந்த உணவகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது..