ஐபிஎல் 2020 நாளை துவக்கம்; முதல் போட்டி மும்பை-சிஎஸ்கே – வெல்லப்போவது யார்?

Filed under: விளையாட்டு |

ஐபிஎல் 2020 நாளை துவங்குகிறது. இந்த முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதுகிறது. இந்த போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஒன்-யில் ஒளிபரப்பாகிறது.

இந்த ஆண்டு ஐபிஎல் 13 வது சீசன் மார்ச் மாதமே நடக்கவிருந்தது. ஆனால், இந்த கொரோனா வைரஸ் காரணத்தினால் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டி நாளை செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டிக்கள் துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய இடங்களில் நடக்க உள்ளது.

நாளை முதல் ஐபில் போட்டி ஆரம்பிக்கிறது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தல டோனி. இவரின் திறமை பற்றி அனைவருக்கும் தெரிந்ததே. இந்த அணியில் ஷேன் வாட்சன், அம்பதி ராயுடு, முரளி விஜய், கேதார் ஜாதவ், ஜடேஜா, எம்.எஸ். டோனி, டு பிளிஸ்சிஸ், வெயின் பிராவோ, தீபக் சாஹர், சர்துல் தாகூர், ஹசில்வுட், சாம் கர்ரன், கேம். எம். ஆசிஃப், மிட்செல் சான்ட்னெர், இம்ரான் தாஹிர், கர்ண் சர்மா, ஆர். சாய் கிஷோர் ஆகியோர் உள்ளனர். இதில் சுரேஷ் ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங் இல்லாதது பெரிய இழப்பாகும். சென்னை அணி 2010,2011,2018 ஆண்டில் ஐபில் கோப்பையை வென்றுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா. இவர் அதிரடியான பேட்ஸ்மேன் என்பது தெரியும். இந்த அணியில் ரோஹித் சர்மா, சூர்ய குமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்டு, ராகுல் சாஹர், குருணால் பாண்ட்யா, பும்ரா, மிட்செல் கிளேனகன், டிரென்ட் போல்ட், நாதன் கவுல்டர்-நைல் ஆகியோர் உள்ளனர். இதில் மலிங்கா இல்லாதது பெரிய இழப்பாகும். 2013,2015,2017,2019 ஆண்டில் ஐபில் கோப்பையை வென்றுள்ளது.

மேலும், இந்த போட்டி நாளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஒன்-யில் ஒளிபரப்பாகிறது. நாளை போட்டியில் வெல்லப்போவது யார் என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.