ஹர்பஜன்சிங் நடித்த பிரண்ட்ஷிப் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் நாளை வெளியீடு – இவர் தான் பாடகர்!

Filed under: சினிமா |

இயக்குனர் ஜான் பால் ராஜ் இயக்கத்தில் ஹர்பஜன்சிங், அக்ஷன் கிங் அர்ஜுன், லாஸ்லியா, சதீஷ் ஆகியோர் நடித்துள்ள படம் பிரெண்ட்ஷிப். இந்தப் படத்தின் மூலம் முன்னாள் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.

இதன் பின்னர் பிக் பாஸ் சீசன் 3யில் கலந்துகொண்டு அனைவரையும் கவர்ந்த லாஸ்லியாவும் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று ஹர்பஜன்சிங் பிறந்த நாளில் வெளியாகியது. போஸ்டர் புகைப்படம் இதோ:

தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் நாளை வெளியாக உள்ளது. இந்த முதல் பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார் மற்றும் இந்த பாடலை நடன இயக்குனர் ராகவா லாரன்ஸ் வெளியிடுகிறார்.

இந்த படத்திற்கு டி.எம்.உதயகுமார் இசை அமைத்துள்ளார்.