டேங்கர் லாரி மீது சரக்கு வாகனம் மோதி, உடல் நசுங்கி ஓட்டுநர் பலி.
நத்தம்-மதுரை 4 வழிச்சாலையில் தடுப்புகளின் இடையே உள்ள செடிகளுக்கு டேங்கர் லாரி மூலம் தண்ணீர் பாய்ச்சும் பணி நேற்று மாலை நடைபெற்று வந்தது.
மதுரையைச் சேர்ந்த நிறுவனத்தின் டெம்போ சரக்கு வாகனத்தை, சென்னையில் இருந்து ஒட்டி வந்த உசிலம்பட்டியை சேர்ந்த பாண்டியன், தண்ணீர் பாய்ச்சி கொண்டு இருந்த டேங்கர் லாரியின் பின்பக்கமாக அதிவேகமாக மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.