அமெரிக்கா வழங்கும் 100 வென்டிலேட்டர் கருவிகள் நாளை இந்தியாவுக்கு வருகை!

Filed under: இந்தியா |

அமெரிக்கா இந்தியாவுக்கு இலவசமாக கொடுக்கும் வெண்டிலேட்டர் கருவிகள் நாளை வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோன வைரஸை எதிர்த்துப் போராட தேவையான உயிர்காக்கும் கருவியான வென்டிலேட்டர்களை இந்தியாவுக்கு இலவசமாக கொடுக்கப்படும் என அமெரிக்கா அதிபர் டிரம்ப் ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

இந்த வகையில் முதலில் 100 வென்டிலேட்டர் கருவிகள் அனுப்பப்படும் என தெரிவித்திருந்தார். தற்போது சிகாகோவில் உள்ள ஸோல் என்கிற நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட 100 வென்டிலேட்டர்களை ஏர் இந்தியா விமானத்தில் நாளை இந்தியாவுக்கு வருகின்றது.

இந்த உயிர் காக்கும் கருவியான வென்டிலேட்டர் இந்தியாவிற்கு வந்தவுடன், இந்திய செஞ்சிலுவை சங்கத்தில் நடைபெறும் நிகழ்வு முடிந்த பின்னர் கொரோனா நோயாளிகளுக்கு சிகிக்சை கொடுக்க மருத்துவமனைக்கு அனுப்பப்படும் என அரசு அதிகாரி கூறியுள்ளார்.