உலக அளவில் மலைப்பகுதியில் போரிடும் அதிக அனுபவம் இந்திய ராணுவத்துக்கு உள்ளது – சீனா ராணுவ நிபுணர்!

Filed under: இந்தியா |

உலகளவில் மலைப்பகுதிகளில் போரிடும் அதிக அனுபவம் இந்திய ராணுவத்திற்கு உள்ளது என சீனா ராணுவ நிபுணர் தெரிவித்துள்ளார்.

இதனைப்பற்றி மார்டன் வெப்பனரி (Modern Weaponry) என்கிற இதழின் ஆசிரியர் ஹூவாங் குவாஸி எழுதிய கட்டுரையில் கூறியது: உலகில் மிகப்பெரிய மற்றும் மிக அதிகமான அனுபவம் உள்ள துருப்புகளை இந்தியா வைத்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

மலைப்பகுதி எற்றத்தில் இந்திய ஒவ்வொரு வீரருக்கும் சிறப்பான திறமையை வளர்த்து வருவதாகவும் மற்றும் மலைப்பகுதியில் போரிடும் அமெரிக்கா, ரஷ்யாவோ மற்றும் ஐரோப்பிய நாடுகளை விட அதிகம் அனுபவம் இந்திய ராணுவத்திற்கு தான் உள்ளது என ஹூவாங் கூறியுள்ளார்.