உத்தரபிரதேச மாநிலத்தின் கேபினட் அமைச்சர் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு – யோகி ஆதித்யநாத் இரங்கல்!

Filed under: இந்தியா |

உத்தர பிரதேசம் மாநிலத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. அவருடைய கேபினட் அமைச்சரவையில் அமைச்சராக இருப்பவர் கமலா ராணி வருண். இவருக்கு 62 வயது ஆகிறது.

இவர் சென்ற ஜூலை 17ஆம் தேதி கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார். இதன் பிறகு அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். தற்போது இன்று காலை அவர் சிகிச்சை பலன் இல்லாமல் உயிரிழந்துள்ளார்.

முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இன்று அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்று பூமி பூஜை அடிக்கல் நாட்டும் வேலைகளை ஆய்வு செய்வதற்கு இருந்து வருகிறார். கேபினட் அமைச்சர் உயிர் இருந்ததால் அந்த பயணத்தை அவர் ரத்து செய்துள்ளார்.