அயோத்திய ராமர் கோவிலுக்கு ஆகஸ்ட் 5ஆம் தேதி பூமி பூஜை!

Filed under: இந்தியா |

அயோத்தியில் ராமர் கோவிலின் அடிக்கல் நாட்டும் விழா ஆகஸ்டு 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார் என தகவல் தெரிவிக்கப்படுகிறது.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை எப்போது நடத்துவது பற்றி கோவிலின் அறக்கட்டளை உறுப்பினர்கள், சமயத் துறவிகள் ஆகியோர் சனிக்கிழமை அன்று விவாதித்துள்ளனர். அதில் பிரதமர் மோடி வருகின்ற ஆகஸ்ட் 3ஆம் தேதி அல்லது 5ஆம் தேதியில் பூமி பூஜை நடத்தலாம் என்று திட்டமிட்டுள்ளது.

தற்போது பூமி பூஜையை ஆகஸ்டு 5ஆம் தேதி காலை 8 மணிக்கு துவங்கும் எனவும் அந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பகல் 11 மணி முதல் ஒரு மணி வரை இருப்பார் எனவும் அறக்கட்டளை வட்டாரங்கள் தெரிவிக்கிறது.