உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும்கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்காமல் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் இந்தியாவில் பொது மக்களைத் தவிர்த்து நடிகர்கள், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் ஆகியோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதையடுத்து இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கடந்த செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொண்டார். தற்போது குணம் அடைந்துள்ளார்.
முதலில் துணை ஜனாதிபதியும் அலுவலகம் ட்விட்டரில் பதிவிட்டது; துணை ஜனாதிபதிக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியாதல் அவர் தனிமைபடுத்திக் கொண்டார். மருத்துவர்களின் ஆலோசனை படி சிகிச்சை பெற்று வருகிறார் என பதிவிட்டது.
தற்போது, நான் நலம் பெறவேண்டும் என எனக்கு கடிதங்கள் அனுப்பிய அனைத்து நல்ல விரும்பினார்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி என துணை ஜனாதிபதி பதிவிட்டுள்ளார்.