கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் கடந்த நான்கு மாதத்துக்கு மேல் தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கு சமயத்தில் சினிமா துறையினர் படப்பிடிப்பு எடுக்கப்படாததால் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். ஆனால், சமூக வலைத்தளம் மூலம் ரசிகர்களிடம் உரையாடி வருகின்றனர்.
இதில் விஜய் போன்ற முக்கியமாக நடிகர்கள் ஊரடங்கு சமயத்தில் வீட்டிலேயே இருந்து வருகின்றனர். தற்போது நான்கு மாதம் பிறகு தளபதி விஜய் ஒரு திருமண விழாவில் பங்கேற்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
மாஸ்டர் திரைப்படத்தின் தயாரிப்பாளர் பிரிட்டோவின் மகள் சினேகாவுக்கும், மறைந்த நடிகர் முரளியின் இளைய மகனும் மற்றும் நடிகர் அதர்வாவின் சகோதரரான ஆகாஷ்க்கும் சென்னை சாந்தோம் தேவாலயத்தில் வரும் 23ஆம் தேதி நடக்க உள்ளது.
மேலும், இந்த நிகழ்ச்சியில் முக்கியமான உறவினர்கள் அனுமதிக்கப்படுவதால் தளபதி விஜய் பங்கேற்பர் என கூறப்படுகிறது.