கொரோனா வைரஸ் காரணத்தினால் ரசிகர்கள் இல்லாமல் இங்கிலாந்து – மேற்கிந்திய தீவு விளையாடி வருகிறது.
ஜேசன் ஹோல்டர் தலைமையில் மேற்கிந்திய தீவுகள் அணி மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு நடைபெற்ற முதல் போட்டியில் மேற்கிந்திய தீவு அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பின்பு இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதனால் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
நாளை கடைசியும் மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராபோர்ட் மைதானத்தில் நாளை நடைபெற உள்ளது.
இதனால் இந்த டெஸ்ட் தொடரை வெல்ல போவது யார் என பல கேள்விகள் எழுந்து வருகிறது. ஆனால். இது இங்கிலாந்து மண்ணில் நடைபெறுவதால் இங்கிலாந்து அணி வெல்வதற்கு அதிகமான வாய்ப்பு இருக்கிறது.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மூன்றாம் நாள் மழை பெய்ததால் ரத்து ஆகியது. ஆனால், இங்கிலாந்து அணி வீரர்கள் சிறப்பாக விளையாடினர். அதிலும் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் சிறப்பாக விளையாடினார்.
மேலும், கடைசி போட்டியும் மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை மாலை 3.30 மணிக்கு சோனி சிக்ஸ் டெலிவிஷன் சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.