அஜீத்தின் அடுத்த படத்தின் ஜோடி யார்?

Filed under: சினிமா |

அஜீத்தின் அடுத்த படத்தில் பிரபல முன்னணி நடிகை நடிக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. நேற்று ஐதராபாத்தில் படத்திற்கான வேலைகள் பூஜையுடன் தொடங்கப்பட்டது. இது சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளன.

பிலிம் சிட்டியில் சென்னை அண்ணா சாலை போன்ற செட் போடப்பட்டு படப்பிடிப்பிற்காக தயார் நிலையில் உள்ளது. இந்த படத்திற்குப் போடப்பட்ட செட்டில்தான் பி வினோத் படப்பிடிப்பை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகிறது. இந்நிலையில் அஜித்குமாரின் அஜித்61 படத்தில் முன்னணி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.


இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் தபுவும் நடிப்பதாகவும் கூறுகிறார்கள். படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.