தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அதிமுக கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இது கூட்டணி கட்சிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை தேமுதிக தற்போது வெளிப்படையாக கூறியுள்ளது.
தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பெண் என்ற முறையில் சசிகலாவிற்கு எனது ஆதரவு உண்டு. சசிகலா விவகாரத்தில் அதிமுக நல்ல நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். தமிழக அரசியலில் சசிகலா பங்கேற்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் என கூறினார்.
சசிகலாவினால் ஆதாயம் அடைந்தவர்கள் அவரை வேண்டாம் எனக் கூறுவது வருத்தம் அளிக்கிறது.
சசிகலாவினால் அதிமுகவில் தற்போது இருப்பவர்கள் நன்றாக இருக்கிறார்கள்.
கூட்டணி பேச்சுவார்த்தையை காலதமாதம் செய்யாமல் அதிமுக உடனே தொடங்க வேண்டும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகுதான் தான் பேச்சுவார்த்தை எனக் கூறுவது காலதாமதத்திற்கு வழிவகுத்து விடும் என்றார்.