அதிமுக கூட்டணியில் இணையும் மற்றொரு முக்கிய கட்சி. விரைவில் வெளியாக உள்ள அறிவிப்பு:

Filed under: அரசியல் |

அதிமுக கூட்டணியில் இணையும் மற்றொரு முக்கிய கட்சி. விரைவில் வெளியாக உள்ள அறிவிப்பு:

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதான அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீட்டை இறுதி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.


அந்த வகையில் அதிமுகவில் பாமக கூட்டணி இறுதியாகி உள்ள நிலையில் அக்கட்சிக்கு 23 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. மற்றொரு கூட்டணி கட்சியான பாஜகவிற்கு 20 தொகுதிகளை அதிமுக ஒதுக்கி உள்ளது. இதனிடையே தேமுதிக உடனான கூட்டணிப் பேச்சுவார்த்தையை அதிமுக கடந்த வாரம் தொடங்கியது.

இந்த பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டி, தேமுதிக கூட்டணி உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலக உள்ளதாக கூறப்பட்டது. பாமகவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த அதிமுக, தேமுதிகவிற்கு உரிய முக்கியத்துவம் கொடுக்காமல், வேண்டுமென்றே காலம் தாழ்த்தி வருவதாகவும் தேமுதிக கருதுகிறது.. எனவே கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது..


அதிமுக – தேமுதிக இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை ஏற்கனவே ரத்து செய்யப்பட்ட நிலையில், நேற்று மீண்டும் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் 23 சட்டமன்ற தொகுதிகள், ஒரு மாநிலங்களவை அவை உறுப்பினர் பதவி ஆகியவற்றை ஒதுக்க வேண்டும் என்று தேமுதிக கேட்டுள்ளது.. ஆனால் அதிமுக 15 தொகுதிகள், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் ஒதுக்கமுடியும் என்று கூறியதாக தெரிகிறது.. இதுகுறித்த இறுதி முடிவு இன்னும் ஓரிரு நாட்களில் எட்டப்படும் என்று கூறப்படுகிறது.