அந்தமானில் தொடர்ந்து நிலநடுக்கம்!

Filed under: இந்தியா |

அந்தமான் அருகே தொடர்ந்து அடுத்தடுத்து 5 முறை நிலநடுக்கம் ஏற்பட்டள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர்.

அந்தமான் பகுதியில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. இன்று காலை முதல் திடீரென அடிக்கடி ஐந்து முறை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. காலை 11 மணி, பிற்பகல் 1.55, 2.06, 2.37 மற்றும் 3.02 ஆகிய மணி நேரங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தமான் அருகே நடுக்கடலில் 10 மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் இதனால் சுனாமி ஏற்படும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர்.