அமைச்சர் எ.வ.வேலுவின் அறிவிப்பு!

Filed under: சென்னை |

சட்டமன்றத்தில் அமைச்சர் எ.வ.வேலு சென்னையில் தேனாம்பேட்டையிலிருந்து சைதாப்பேட்டைக்கு இடையே உயர்மட்ட சாலை அமைக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

தேனாம்பேட்டையிலிருந்து சைதாப்பேட்டை வரை ஐந்து முக்கியமான சிக்னல்கள் இருப்பதால், வாகனங்கள் தினமும் பெரும் போக்குவரத்து நெரிசலுக்கு ஆளாகின்றனர்.

இதனை தவிர்க்கும் வகையில் தேனாம்பேட்டையிலிருந்து சைதாப்பேட்டை வரை உயர்மட்ட சாலை அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தள்ளார். இதற்காக 475 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்று அவர் கூறினார்.