அமைச்சர் பொன்முடியின் தகவல்!

Filed under: தமிழகம் |

அமைச்சர் பொன்முடி பொறியியல் முதலாமாண்டு வகுப்புகள் எப்போது தொடங்குமென்ற தகவலை அளித்துள்ளார். வரும் அக்டோபர் மாத இறுதியில் பொறியியல் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்குமென உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்நித்த அமைச்சர் பொன்முடி, 2022&-2023ம் ஆண்டிற்கான பி.இ., பிடெக் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வகுப்புகள் நிறைவடைந்துள்ளதாகவும், மருத்ததுவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியிட தாமதானதால், முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கவுள்ளதாககவும், நீட் தேர்வு ரிசல்ட் வந்த பின், பொறியியல் கவுன்சிலிங் தொடங்கப்பட்டது என்று தெரிவித்தார். மேலும், வரும் அக்டோபர் 13ம் தேதி 3 வது கட்ட மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடக்கும் என்றும், அக்டோபர் மாத இறுதியில் பொறியியல் முதலமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.