அமைச்சர் மா சுப்பிரமணியன் நடிகர் விவேக்கிற்கு மரியாதை!

Filed under: சென்னை |

அமைச்சர் மா சுப்பிரமணியன் சென்னையில் நடப்படும் மரத்திற்கு ‘விவேக் மரம்’ என்ற பெயரிடப்படுவதாக அறிவித்துள்ளார்.

அந்த வகையில் சென்னை சைதாப்பேட்டையில் ஒரு லட்சம் மரம் வைக்கப்படும் என்றும், ஒரு லட்சமாவது மரம் வைக்கப்படும்போது அந்த மரத்திற்கு விவேக் மரம் என்று பெயர் வைக்கப்படும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சென்னை சைதாப்பேட்டையில் இதுவரை 98,000 மரம் நடப்பட்டு உள்ளன. இன்னும் ஒரு சில நாட்களில் ஒரு லட்சம் மரம் நடப்படும் என்றும் ஒரு லட்சமாவது மரம் நடப்படும் போது அந்த மரத்திற்கு விவேக் மரம் என்று பெயர் வைக்க திட்டமிட்டு உள்ளதாகவும் அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மரம் நடுவதில் அதிக ஆர்வம் காட்டிய விவேக்கிற்கு மரியாதை செய்யும் வகையில் இந்த பெயர் வைக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.