அமைச்சர் வீட்டை முற்றுகையிட்ட பாஜகவினர் கைது!

Filed under: அரசியல்,தமிழகம் |

அமைச்சர் கீதா ஜீவன், வீடு மற்றும் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பாஜகவினரை போலீஸார் கைது செய்தனர்.

பாஜக மாநிலத் துணைத் தலைவர் சசிகலா புஷ்பாவின் வாகனம் மற்றும் இல்லத்தின் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தன் டுவிட்டரில், “திமுகவின் அடக்குமுறைக்கு நாங்கள் அஞ்சோம். தொடர்ச்சியாக பாஜகவின் தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் திமுகவினரின் அராஜக போக்கை வன்மையாக கண்டிக்கின்றேன். அமைச்சர் கீதா ஜீவனின் தூண்டுதலின் பெயரில், பாஜக மாநிலத் துணைத் தலைவர் சசிகலா புஷ்பா வாகனம் மற்றும் இல்லத்தின் மீது கற்களைக் கொண்டு தாக்கிய திமுகவினரை காவல்துறையினர் உடனடியாக கைது செய்ய வேண்டும்” என்று பதிவிட்டிருந்தார். இன்று அமைச்சர் கீதா ஜீவன் வீடு, அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 200க்கும் மேற்பட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.