அயோத்தியா மண்டப விவகாரத்தில் முக்கிய உத்தரவு!

Filed under: சென்னை |

இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அயோத்தியா மண்டப நிர்வாகத்தை எடுத்த அறநிலைய உத்தரவை எதிர்த்த மேல் முறையீடு வழக்கு விசாரணைக்கு வந்தது.

விசாரணையில் அயோத்தியா மண்டபத்தை அரசு எடுத்த உத்தரவையும், அதை உறுதி செய்த தனி நீதிபதி உத்தரவும் ரத்து செய்யப்படும் எனவும் நீதிபதிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஸ்ரீராம் சமாஜம் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பை நாளை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்தது. குற்றச்சாட்டுகள் குறித்த ஆதாரங்களை வழங்கி விசாரணை நடத்தலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் விசாரணை அடிப்படையில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.