அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா எப்போது!

Filed under: இந்தியா |

முன்னாள் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மகள் கவிதா அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட உள்ளதால் இந்துக்களின் கனவு நனவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அயோத்தியில் ஜனவரி மாதம் 22ம் தேதி ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. அடுத்த மாதம் 16ம் தேதி அதற்கான பூஜைகள் தொடங்குகின்றன. இதற்காக 4000 துறவிகள் வரவழைக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தெலுங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் மகள் மற்றும் பிஆர்எஸ் கட்சியின் மேலவை உறுப்பினர் கவிதா தனது வலைதள பக்கத்தில், அயோத்தியில் ஸ்ரீ சீதாராமா சந்திர ஸ்வாமிசிலை பிரதிஷ்டை செய்யப்படுவதன் மூலம் உலகில் உள்ள கோடிக்கணக்கான இந்துக்களின் கனவு நனவாகியுள்ளது. இதை தெலங்கானா மாநிலத்துடன் இணைந்து ஒட்டுமொத்த நாடும் வரவேற்கிறது’’ என குறிப்பிட்டுள்ளார்.