அயோத்திய ராமர் கோவிலின் கட்டுமான பணியை யோகி ஆதித்யநாத் நேரில் பார்வையிட்டார்!

Filed under: இந்தியா |

அயோத்தியில் இருக்கும் ராமர் கோவில் கட்டுமான பணிகளை உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நேரில் பார்வையிட்டார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் அயோத்தி ராமர் கோவில் கட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் சென்ற ஆண்டு நவம்பர் மாதம் அனுமதி கொடுத்தது. இதனை தொடர்ந்து ராமர் கோவில் கட்டுவதற்கான அறக்கட்டளைகள் சென்ற பிப்ரவரி மாதம் மத்திய அரசால் அமைக்கப்பட்டது.

இதன் பின்னர் மார்ச் மாதம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. மேலும் மே மாதம் இறுதியில் ராமர் கோயில் கட்டும் பணிகள் துவங்கப்பட்டது.

இந்த பணிகள் சரியாக நடைபெறுகிறதா என்பதை உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நேரில் சென்று பார்வையிட்டார். இதனை ஆய்வு செய்த பின் அறக்கட்டளை உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.