ஆசிரியர் தகுதித் தேர்வு முத்தரசன் கோரிக்கை!

Filed under: தமிழகம் |

சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

கடந்த 2011ம் ஆண்டுக்கு முன் பணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள் பணியில் தொடர அரசாணை வெளியிட வேண்டும் என்றும் சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் நீட்டிக்க உரிமை இல்லை என்றும், சம்பள உயர்வு பெற உரிமை இல்லை என்றும் சமீபத்தில் நீதிமன்றம் கருத்து தெரிவித்த நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் கோரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.