நேற்றைய போட்டியில் அதிரடியாக விளையாடிய ஆன்ட்ரூ ரஸ்ஸல் கே.கே.ஆர் அணியை வெற்றி பெறவைத்தார்.
15 வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் பிரம்மாண்டமாக நடந்து வருகிறது. இன்றைய போட்டியில் கொல்கத்தாவுக்கு எதிராக பஞ்சாப் அணி விளையாடியது. இதில் கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் ஆண்ட்ரூ ரஸ்ஸல் 31 பந்துகளில் 70 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு முக்கியக் காரணியாக அமைந்தார்.
அவரின் இந்த அதிரடி இன்னிங்ஸில் 2 பவுண்டரிகளும் 8 சிக்ஸர்களும் அடங்கும். கடந்த சில சீசன்களாக ரஸ்ஸல் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சொதப்பி வந்த நிலையில் இப்போது மீண்டும் பார்முக்கு வந்துள்ளது அந்த அணி ரசிகர்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது.