ஆப்பிரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்!

Filed under: உலகம் |

மேற்கு ஆப்பிரிக்காவில் பயங்கரவாத அமைப்புகள் தோன்றி அதிக அளவில் வளர்ச்சி அடைந்துள்ளன. இந்நிலையில் ஒரு பயங்கரவாத குழுக்கள் ஒரு கிராமத்தையே சூறையாடியுள்ள சம்பவம் நடந்தேறி உள்ளது.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான புர்கினா பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் தோன்றி அபாயகரமான அளவில் வளர்ச்சியடைந்துள்ளன. இந்த பயங்கரவாத அமைப்புகளை அடக்க முடியாமல் புர்கினா பாசோ ராணுவமும் திணறி வருகிறது. அந்நாட்டின் கோம்பியா மாகாணத்திற்குள் புகுந்த பயங்கரவாத கும்பல் ஒன்று நள்ளிரவில் கிராமத்தையே சூறையாடியுள்ளது. அங்கிருந்த பொருட்களை அள்ளிக் கொண்டு போனதுடன் அங்கிருந்த பெண்கள், குழந்தைகள் உள்பட 50க்கும் மேற்பட்டோரை துப்பாக்கியால் சுட்டும், பயங்கர ஆயுதங்களால் தாக்கியும் கொன்று குவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.