ஆர்.எஸ்.எஸ். ஊர்வத்திற்கு 44 இடங்களில் அனுமதி!

Filed under: தமிழகம் |

ஆர்எஸ்எஸ் அமைப்பு ஊர்வலம் தமிழகத்தில் 44 இடங்களில் நடத்துவதற்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றத்தில் தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதுகுறித்து அனுமதியளிக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என திருமாவளவன் உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் நீதிமன்ற உத்தரவு காரணமாக திட்டமிட்டபடி ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 44 இடங்களில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், திருப்பூர், கன்னியாகுமரி, பல்லடம் ஆகிய பகுதிகளை தவிர மற்ற இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்தலாமென சென்னை ஐகோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.