ஆர்.கே.சுரேஷிடம் 7 மணி நேரம் விசாரணை!

Filed under: சினிமா |

நடிகர் ஆர்.கே.சுரேஷ் தனக்கும் ஆருத்ரா மோசடிக்கும் எவ்விதமான தொடர்புமில்லை என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் ஆர்.கே.சுரேஷ் கடந்த சில மாதங்களுக்கு முன் ஆருத்ரா மோசடி வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது, திடீரென ஆர்.கே.சுரேஷ் துபாய்க்கு சென்று விட்டார். அவர் சமீபத்தில் சென்னை திரும்பியவர் பொருளாதார குற்றப்பிரிவு தலைமை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டபோது அவர் “தனக்கும் ஆருத்ரா மோசடிக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை. போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. சில ஆவணங்கள் கேட்கப்பட்டுள்ளது. அது நாளை சமர்ப்பிக்கப்படும். சென்னை பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் இன்று 7 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. நாளை மீண்டும் ஆஜராகவுள்ளேன்’’ என்று தெரிவித்துள்ளார்.