இசைப்புயலின் புதிய அவதாரம்!

Filed under: சினிமா |

கென்ஸ் திரைப்பட விழாவில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இயக்கியுள்ள “லெ மஸ்க்” திரையிடப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் மூலம் இசைப்புயல் புதிய அவதாரம் எடுத்துள்ளார் என்பது ரசிகர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி.

இதன் மூலம் இந்திய சினிமாவில் பிரபலமான இயக்குனராக அறியப்படுபவர் ஏ.ஆர்.ரகுமான். தமிழ் சினிமாவிலிருந்து தனது இசை பயணத்தை தொடங்கியவர் தற்போது ஹாலிவுட் வரை சென்று கலக்கி கொண்டிருக்கிறார்.

இசையமைப்பது தவிர்த்து சமீபத்தில் “99 சாங்ஸ்” போன்ற படங்களை தயாரித்தார். தற்போது முதன்முறையாக ஒரு படத்தையும் இயக்கியுள்ளார் இசை புயல். 30 நிமிடங்கள் கொண்ட அந்த குறும்படம் “லெ மஸ்க்” கேன்ஸ் உலக திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.