இந்தியர்களே.. தேசியக்கொடிக்கு உரிய மரியாதை. மீறினால் 3ஆண்டுகள் சிறை. அதிரடி உத்தரவு.

Filed under: அரசியல்,இந்தியா,தமிழகம் |

நம் நாட்டின் தேசிய கொடியை எவ்வாறு மதிக்க வேண்டும் என்பதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

நம் நாட்டின் தேசிய கொடி, தேசிய கீதம் போன்ற நம் தேசிய கௌரவ சின்னங்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதற்கான வழிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. அதிலும் குறிப்பாக தேசிய, கலாச்சார மற்றும் விளையாட்டு நிகழ்வுகளில் பொதுமக்கள் காகிதத்தில் உருவாக்கப்பட்டுள்ள தேசியக் கொடியையே பயன்படுத்த வேண்டும் என இந்திய கொடி குறியீட்டில் வழிமுறை செய்யப்பட்டு உள்ளது.

அந்த நிகழ்வுகளுக்குப் பின் இந்த கொடிகளை தரையில் வீசி விட்டுச் செல்லக்கூடாது.அதுமட்டுமன்றி பொது இடத்தில் அல்லது பொதுமக்கள் முன்னிலையில் தேசியக் கொடியை எரித்தல், சிதைத்தல், அழித்தல் போன்ற அவமதிப்பு செய்வோருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். தேசிய கீதம் பாடுவதை ஒருவர் வேண்டுமென்றே தடுத்தால் அல்லது இடையூறு ஏற்படுத்தினால் 3 ஆண்டுகள் வரை சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.