இந்தியாவின் பெயரையே மாற்ற வேண்டும் – உச்சநீதிமன்றத்தில் பரபரப்பைக் கிளப்பிய வழக்கு!

Filed under: அரசியல்,தமிழகம் |

இந்தியாவின் பெயரையே மாற்ற வேண்டும் – உச்சநீதிமன்றத்தில் பரபரப்பைக் கிளப்பிய வழக்கு!

இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றவேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்தியா என்ற பெயர் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது என்றும் பாரசீகர்களால் உருவாக்கப்பட்டது என்றும் பல கருத்துகள் சொல்லப்பட்டு வருகின்றன. ஆனால் அந்நியர்களின் படையெடுப்புக்கு முன்னர் இந்தியா என்ற பெயர் இருக்கவில்லை என்பது உறுதி. இந்நிலையில் சுதந்திரத்துக்குப் பின்னரும் இந்தியா என்ற பெயரே அரசியலமைப்புச் சட்டத்தின் படி வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் டெல்லியை சேர்ந்த நமஹா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் தொடுத்துள்ள பொதுநல வழக்கில் ‘இந்தியா என்ற பெயர் ஆங்கிலேய காலணிய ஆதிக்கத்தை நினைவூட்டுவதாக உள்ளது. எப்படி நம் நகரங்கள் ஆங்கிலேயப் பெயர்களில் இருந்து தம்முடைய கலாச்சாரப் பெயருக்கு மாற்றப்பட்டதோ அது போல நமது நாட்டின் பெயரும் பாரதம் என மாற்றப்பட மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிடவேண்டும்’ எனக் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை ஜூன் 2 ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்துள்ளது.