இந்தியா டூ மியான்மர் எல்லையில் வேலி!

Filed under: இந்தியா,உலகம் |

மத்திய அரசு இந்தியா டூ மியான்மர் எல்லை முழுவதையும் வேலி அமைத்து தடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்புக்கு மணிப்பூர் இனக்குழுக்கள் இடையே ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளது.

மணிப்பூரின் மெய்தி இனக்குழுவினருக்கும், குகி இனக்குழுக்களுக்கும் இடையே கடந்தாண்டு முதலாக தொடர் மோதல் வன்முறைகள் நடந்து வருகிறது. மணிப்பூர் டூ மியான்மர் இடையேயான எல்லையை வேலி அமைத்து மூட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கடந்தாண்டில் அண்டை நாடான மியான்மரில் ஆங் சான் சூகியின் மக்களாட்சியை ஒடுக்கி ராணுவம் ஆட்சியமைத்துள்ளது. இதனால் மியான்மரில் போராட்டங்கள், உயிர்பலிகள் அதிகரித்தன. மியான்மர் நாட்டின் அருகே உள்ள இந்திய மாநிலங்களான மிசோரம், மணிப்பூர், நாகலாந்து, அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்குள் மியான்மரை சேர்ந்த சிலர் ஊடுறுவியுள்ளதாகவும், மணிப்பூர் கலவரத்திற்கு அவர்கள்தான் காரணம் என்றும் மணிப்பூர் அரசு குற்றம் சாட்டியிருந்தது. இந்நிலையில்தான் இந்தியா டூ மியான்மர் இடையேயான 1,643 கி.மீ எல்லையை வேலி போட்டு தடுக்க உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு மணிப்பூரின் மெய்தி இன மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஆனால் குகி மற்றும் நாகா இன மக்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.