இந்திய யோகா சங்கத்தின் தலைவராக ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தேர்வு!

இந்திய யோகா சங்கத்தின் நிர்வாகக் குழு, இச் சங்கத்தின் உச்ச அமைப்பாகும். இதில் காயத்ரி பரிவாரின் டாக்டர் பிரணவ் பாண்டியா, ஈஷா அறக்கட்டளையின் நிறுவனராகிய சத்குரு ஜக்கி வாசுதேவ், சாந்தா குரூஸ் யோகா நிறுவனத்தின் டாக்டர் ஹன்சா யோகேந்திரா, ரிஷிகேஷ் பரமார்த்   நிகேதனின் சுவாமி சித்தானந்த் சரஸ்வதி, கைவல்யதாமா யோகா நிறுவனத்தின் தலைவராக தற்போது உள்ள எஸ். ஓபி திவாரி, சஹாஜ் மார்க்கின் கமலேஷ் பட்டேல், மோக்ஷயாதன் யோக சன்ஸ்தானின் சுவாமி பாரத் பூஷன் மற்றும் மொரார்ஜி தேசாய் தேசிய யோகா மற்றும் இயற்கை மருத்துவ நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் ஈஸ்வர பசவரடி உள்ளிட்ட முக்கிய யோகா குருமார்கள் இதில் உள்ளனர் .

இன்று ஆன்லைனில் நடைபெற்ற நான்காவது நிர்வாகக் குழுவின் கூட்டத்தில் , ​​அனைத்து உறுப்பினர்களும் குருதேவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை புதிய தலைவராக வரவேற்றனர். இந்திய யோகா சங்கம் என்பது இந்தியாவில் உள்ள முன்னணி யோகா நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் சுய-கட்டுப்பாட்டு அமைப்பாகும். யோகா மற்றும் உலகெங்கிலும் உள்ள அதன் பயன்பாடுகளை ஊக்குவிப்பதற்கும் முன்னேற்றுவதற்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ள அனைத்து பொதுவான யோகா மரபுகளையும் ஒன்றிணைக்கும் முதல் முயற்சி இந்திய யோகா சங்கம் ஆகும். ஆயிரக்கணக்கான யோக வல்லுநர்களை உறுப்பினர்களாக கொண்டுள்ள இந்த சங்கம்  தனது 28 மாநிலங்கள் மற்றும் இந்தியாவின் யூனியன் பிரதேசங்களில் அதன் உள்ளூர் குழுக்களை கொண்டுள்ளது.

இந்திய யோகா சங்கம் பல அரசு வாரியங்கள் மற்றும் குழுக்களில் செயலில் உள்ள கொள்கை மற்றும் ஆலோசனை அளிக்கும் பங்கினை வகிக்கிறது. யோகாவைப்  பரப்புதல் மற்றும் அதன் மேம்பாட்டுக்காக ஆயுஷ் அமைச்சகத்துடன் நெருக்கமாக பணியாற்றுகிறது. இச் சங்கம் எதிர்காலத்தில் யோகா கற்றல் மற்றும் பயிற்சிக்கு ஆர்வமாக உள்ள ஆயிரக் கணக்கான இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும்  பணியையும் ஏற்கத் திட்டமிட்டுள்ளது. உலகம் முழுவதும் யோகாவின் முக்கிய அதிகார அமைப்பாக மாறுவதையும்,  மற்றும் உண்மையான அர்த்தத்தில் யோகா பற்றிய உலகளாவிய பொது விழிப்புணர்வை உருவாக்குவதையும் இச் சங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஒரு சர்வதேச யோகா மாநாடு ஏப்ரல் 2022 இல் புது தில்லியில் இந்திய யோகா சங்கத்தால் ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது, ஆன்லைனில் ஐம்பதாயிரத்திற்கும் அதிகமானவர்கள் பங்கேற்பார்கள்  மற்றும் சில நூறு பேர் டெல்லியில் நேரில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆட்சிக்  குழுவின் உறுப்பினர்கள் தவிர, நிர்வாகக் குழுவின் நான்காவது கூட்டத்தில் நிர்வாக கவுன்சிலின் தலைவர் டாக்டர் எச்.ஆர் நாகேந்திரா மற்றும் இந்திய யோகா சங்கத்தின் பொதுச் செயலாளர் கம்லேஷ் பார்வால் ஆகியோர் கலந்து கொண்டனர்.