இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் பிரிட்டன் பிரதமரா-?

Filed under: உலகம் |

பிரிட்டன் பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்கிற்கு வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அவரது அமைச்சரவையில் இருந்த நிதியமைச்சர் உள்பட 4 அமைச்சர்கள் போரிஸ் ஜான்சனின் செயல்பாடுகளால் அதிருப்தியடைந்து தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதையடுத்து பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் தனக்கு நெருக்கடி ஏற்பட்ட நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் முக்கிய அமைச்சராக இருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமராக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. பிரதமர் பதவிக்கான போட்டியில் அவர் இருப்பதாகவும் அவர் தனது குடும்ப பாரம்பரியத்தை கூறி டுவிட்டர் உள்பட சமூக வலைதளங்களில் பிரசாரம் செய்வதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவை பல ஆண்டுகள் ஆட்சி செய்த பிரிட்டனை இந்தியர் ஒருவர் ஆட்சி செய்ய வாய்ப்பு உள்ளதா?