இனி படங்கள் இயக்கமாட்டேன்!

Filed under: சினிமா |

முன்னணி ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி திரைப்படங்களில் வெற்றிகரமான ஒளிப்பதிவாளர்.

கமல்ஹாசன்- அர்ஜூன் இணைந்து நடித்த “குருதிப் புனல்,” நடிகர் விக்ரம் நடித்த “மீரா,” “வானம் வசப்படும்க” ஆகிய படங்களை இயக்கினார். ஆனால், முதல் இரு படங்கள் வெற்றியடைந்து, “வானம் வசப்படும்” தோற்றது. பல முன்னணி இயக்குனர்களிடன் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து வந்தவர், படங்களை இயக்கவில்லை. இதுபற்றி அவர், “இயக்குனர் ஆகவேண்டுமென்று சில படங்களை இயக்கினேன். ஆனால் அவை வெற்றிபெறவில்லை. அதனால், படம் இயக்காமல், ஒளிப்பதிவு மட்டும் செய்து வருகிறேன். ஒரு இயக்குனருக்கு எல்லாம் துறையிலும் பணியாற்ற வேண்டும், அது எனக்கு இயலாதது” எனக் கூறியுள்ளார்.