இன்ஜினியர் ஏமாற்றிய 8 பெண்கள்!

Filed under: இந்தியா |

இஞ்சினியர் ஒருவர் 8 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். அவர் மீது அனைத்து பெண்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.

சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிபவர் சிவசங்கர் பாபு. இவர் ஆந்திரா மாநிலம குண்டூரை சேர்ந்தவர். இவர் திருமணத் தகவல் மையங்களில் தனக்கு லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குவதாக விளம்பரம் செய்து, விவாகரத்து பெற்ற பெண்களைத் தொடர்ந்து கொண்டு பேசியுள்ளார். இவர் மீது சில பெண்கள் காதலில் விழுந்துள்ளனர். அவர்களிடமிருந்து, நகைகள், மற்றும் பணத்தைப் பெற்றுக்கொண்டு, தலைமறைவாகி விடுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார் சிவசங்கர் பாபு. பாதிக்கப்பட்ட சில பெண்கள் தற்போது கர்ப்பமாகியுள்ளனர். சுமார் 8 பெண்கள் சிவசங்கர் மீது ஆந்திர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.