இம்ரான் கான் கைது செல்லாது உச்சநீதிமன்றம் அதிரடி!

Filed under: உலகம் |

சமீபத்தில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவரது கைது செல்லாது என பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.

பாகிஸ்தான் பிரதமராக கடந்த 2018ம் ஆண்டு பதவி ஏற்ற இம்ரான் கான் மீது ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் என பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு சொந்தமான அறக்கட்டளை மூலம் 5,000 கோடி ஊழல் செய்யப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு கூறி அவரை மே 1ம் தேதி கைது செய்ய உத்தர பிறப்பிக்கப்பட்டது. இந்த கைது நடவடிக்கை காரணமாக பாகிஸ்தானில் பெரும் வன்முறை வெடித்தது. வன்முறையை கட்டுப்படுத்த 144 தடை உத்தரவு பிறக்க பிறப்பிக்கப்பட்டது. இம்ரான் கானை இன்னும் ஒரு மணி நேரத்தில் ஆஜர் படுத்த வேண்டும் என பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. சற்றுமுன் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து இம்ரான்கான் கைது செல்லாது என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக அறிவித்ததையடுத்து அவர் உடனடியாக விடுதலை செய்யப்பட்டுள்ளார்.