இயக்குநர் பிரசாந்த் நீல் கே.ஜி.எப் 2 திரைப்படம் 100வது நாளை கொண்டாடும் விதமாக இப்படத்தின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியான கேஜிஎப் 1 திரைப்படம் இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது. கன்னடத்தில் எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். இதையடுத்து மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் அடுத்த பாகமான கே.ஜி.எப் 2 ஏப்ரல் 14ம் தேதி ரிலீஸானது. படம் 1000 கோடி ரூபாயை வசூல் செய்து பிளாக்பஸ்டர் ஹிட்டானது. அந்த திரைப்படம் 100 ஆவது நாளை எட்டியுள்ளது. இதை கொண்டாடும் விதமாக படத்தின் இயக்குநர் பிரசாந்த் நீல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.