இறைச்சி கடைகள் அடைப்பு. ஆடிப்போன வியாபாரிகள். சென்னையில் பரபரப்பு உத்தரவு.. !

Filed under: சென்னை |

சென்னையில் உள்ள அனைத்து இறைச்சிக் கடைகளும் வருகின்ற 15ஆம் தேதி மூடப்படும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.

வருகின்ற 15ஆம் தேதி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அனைத்து இறைச்சி கூடங்களும் மூடப்படும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,மாநகராட்சி மற்றும் பொது சுகாதாரத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் இறைச்சி கூடங்கள் அனைத்தும் வருகின்ற 15ஆம் தேதி மூடப்பட வேண்டும்.

ஆடு,மாடு இதர இறைச்சி கடைகளில் இறைச்சி விற்பனை செய்வதற்கும், பல்பொருள் அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்களில் பதப்படுத்திய இறைச்சிகள் விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனவே வருகின்ற ஜனவரி 15ஆம் தேதி அனைத்து இறைச்சி சார்ந்த கடைகள் மூடப்பட வேண்டும்.வியாபாரிகள் அனைவரும் அரசு உத்தரவின்படி முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.