இலங்கை கிரிக்கெட் வாரியம் வேண்டுகோள் ரிஸ்க் எடுக்குமா BCCI

Filed under: விளையாட்டு |

இலங்கை கிரிக்கெட் வாரியம் வேண்டுகோள் ரிஸ்க் எடுக்குமா BCCI

இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் தொடர் ஜூலை மாதம் நடக்க இருந்த நிலையில் அதை ரத்து செய்ய வேண்டாம் என்றும் இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மாதம் 29 ஆம் தேதி துவங்கவிருந்த ஐபிஎல் போட்டிகள் கால வரையறையின்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.. இந்நிலையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதை தடுக்கும் விதமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு மூன்று முறை அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது ஊரடங்கு இன்றோடு முடியவுள்ள நிலையில் அடுத்த கட்ட அறிவிப்பு என்னவாக இருக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அதனால் ஐபிஎல் நடப்பது என்பது குதிரைக் கொம்பாக மாறியுள்ளது. இந்நிலையில் ஜூலை மாதம் இந்திய அணி இலங்கை சென்று விளையாட இருந்தது. அந்த தொடரை ரத்து செய்ய வேண்டாம் என இலங்கை கிரிக்கெட் வாரியம் பிசிசிஐக்கு கடிதம் எழுதியுள்ளது. இந்த கடிதத்திற்கு பதிலளித்துள்ள இந்திய கிரிக்கெட் வாரியம் மத்திய அரசு அனுமதி அளித்தால், இந்திய கிரிக்கெட் அணி இலங்கை சென்று விளையாட தயார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தற்போது வரை விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தொடர் நடக்குமா? பிசிசிஐ இந்திய வீரர்களின் உயிரை வைத்து ரிஸ்க் எடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

©நெற்றிக்கண்