ஈக்வடாரில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் 16பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சமீபத்தில் தென்அமெரிக்க நாடான ஈக்டாரிலுள்ள குயாயாஸ் நகரில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.8 ஆகப் பதிவானதாக வல்லுனர்கள் கூறினர். இதில் சிக்கி சுமார் 14 பேர் உயிரிழந்ததாகவும், 300க்கும் அதிகமானோர் படுகாயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியானது. இச்சோகம் மறைவதற்குள், தற்போது மற்றோரு சம்பவம் நடந்துள்ளது. இங்குள்ள சிம்பொரொசா மாகாணம் அலுசி கண்டோன் நகரின் மலைப்பகுதியில், ஞாயிற்றுக்கிழமையன்று இரவு நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், பல வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. மீட்புக்குழுவினர் வந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்குள், 16 பேர் பலியாகினர். 16 பேர் காயமடைந்த நிலையில், இவர்கள் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.