உதயநிதி பட நிறுவனத்தின் திரைப்பட தேதி அறிவிப்பு!

Filed under: சினிமா |

2022ம் ஆண்டு வெளியான முக்கிய திரைப்படங்கள் அனைத்தையுமே உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் ரிலீஸ் செய்து வருகிறது.

பிரபுசாலமன் இயக்கத்தில் அஸ்வின் நடிப்பில் உருவான “செம்பி” என்ற திரைப்படத்தையும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் ரிலீஸ் செய்ய உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் டிசம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நிவாஸ் பிரசன்னா இசையில் உருவாகி இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இப்படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. “குக் வித் கோமாளி” அஸ்வினுக்கு இந்த படமாவது திருப்புமுனையை ஏற்படுத்துமா என்பதை திரைப்படம் ரிலீசானபிறகுதான் தெரியும்.